His & Her

முடில கண்ணம்மா! இதுக்கு மேல பாடி தாங்காது! அன்னைக்கு வைரலான அவங்களா இது? சான்ஸ்சே இல்ல, அழகில் சாஞ்சுட்டேன்!

Nov 21 2020 03:34:00 PM

ஒரு மாதத்திற்கு முன்னர், "கண்ணம்மா" என்ற பெயரைக்கேட்டாலே, சோஷியல் மீடியா மீம்ஸ் குரூப்கள் எல்லாம் குஷியாகிவிடும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாரதி கண்ணம்மா' சீரியலில், ஹீரோயின் வயிற்றில் குழந்தையுடன் வீட்டைவிட்டு கோப மாக வெளியேறும் காட்சி வைரலாகி, அது திரைப்படங்களுடம் தொடர்புபடுத்தி மீம்ஸ் போடப்பட்டது. ஆறு வருடத்திற்கு முன்னர் வெளியான, "கிருப கிருப" பாடலை இன்னைக்கு பேமஸ் ஆக்கியது போல, கண்ணம்மாவை ஒபாமா ரேஞ்சுக்கு பிரபலப்படுத்தினர்.

kannamma serial actress

அதிலிருந்து கண்ணம்மா கேரக்டரில் நடித்த, தொலைக்காட்சி நடிகை ரோஷினி ஹரிபிரியனுக்கு ஹீரோயின் அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்துள்ளது. சினிமா நடிகைகளுக்கு நிகராக சீரியல் நடிகைகளும் பிரபலமடைய முதல் காரணம் சோஷியல் மீடியா மட்டுமே. சீரியல் நடிகர், நடிகைகளுக்கு என்றே லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட குரூப்ஸ் உருவாக்கப்பட்டு, அதில் சீரியல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால் திறமையான தொலைக்காட்சி நடிகர்கள் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பெயரெடுத்து விடுகின்றனர்.

kannamma serial actress

அதில் சமீபத்தில் பிரபலமானவர் தான், "கண்ணம்மா" கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிபிரியன். சொல்லப்போனால் இவங்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் ஒரு ரகம். "நீ எல்லாம் கருப்பு, நீ ஹீரோயின் கான்செப்டுக்கு ஒத்துவர மாட்ட" என்று சொல்லப்பட்டு, பிறகு திறமையினால் மட்டுமே அடுத்தகட்ட நிலையை அடைந்துள்ளனர். கருப்பா இருந்தாலும், கலையா இருக்காங்கன்னு சொல்வாங்க இல்லையா? அந்த மாதிரி டஸ்கி ஸ்கின் டோன் கொண்டவர்கள் இருவரும்.

kannamma serial actress

"பாரதி கண்ணம்மா" சீரியலில் வரும் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், தன்னைப் பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரோஷினி ஹரிபிரியன். தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு, ஆக் ரோஷமாக இருந்த அந்த கண்ணம்மாவா இப்படி அழகா இருக்காங்க? என்று ஆச்சர்யப்பட வைத்துள்ளது.