Spellbound

#MaFoi: தமிழக அமைச்சர்களில் அதிக மூளையிருப்பது இவருக்கா? 60,000 ரூபாய் முதலீட்டை 1000 கோடிக்கு மேல் மாற்றிய வித்தைகாரர்!

Jul 31 2020

ஒவ்வொருத்தருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்வம் மாறும். ஒருத்தனுக்கு கோடி கோடியாய் பணத்தை கொட்டிக்கொடுத்து ஒரே இடத்தில் அமர வைத்திருப்போம். இவ்வளவு கோடி இருக்குல, அவன் சந்தோசமா இருப்பான் என்று நினைப்போம். உண்மையில் அவனது ஆர்வம், வெளியில் சுற்ற வேண்டும், புது, புது இடங்களை பார்க்க வேண்டும் என்பதாக இருக்கும். நம் மனதுக்கு என்ன பிடிக்குமோ, அதனை செய்தால் மட்டுமே, ஆத்ம திருப்தி கிடைக்கும். இது நமக்கு மட்டும் பொருந்துவது அல்ல, சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் தான். 

mafoi pandiyarajan mafoi-company

அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும், ஒரு வித்தியாசமான மனிதரைப்பாற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் என்ன வித்தியாசம் இருக்க போகிறது? அவர் ஒரு அமைச்சர்! அரசியலில் கோடி, கோடியாக சம்பாரித்து இருப்பார் என்று தானே நினைப்போம். ஆனால் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகிவிட்டு, தனக்கு அரசியல் பிடிக்கும் என்பதால், அரசியலுக்குள் நுழைந்தவர் மாஃபா பாண்டியராஜன். இவரது பேக்ரவுண்டை ஆரம்பத்தில் இருந்து அலசினால், எல்லாமே டாப் லெவலில் இருக்கும்.

mafoi pandiyarajan mafoi-company

பாண்டியராஜனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமமாம். பள்ளி படிப்பை முடித்து, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஜாம்ஷெட்பூரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்று, பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மனிதவள மேம்பாட்டு பிரிவு என்ற ஒரு துறை இந்தியாவில் அறிமுகமான காலத்திலேயே, அதில் தடம் பதித்து துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொண்டவர்.

mafoi pandiyarajan mafoi-company

பிறகு 1992 ஆம் ஆண்டு வாக்கில், தனியாக மனிதவள மேம்பாட்டு துறையில் தனியாக ஒரு நிறுவனம் ஆரம்பித்து, இன்றைக்கு பல்லாயிரம் கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுக்க 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, இவரது நிறுவனம் வேலை வாங்கி கொடுத்துள்ளது. வெறும் 60 ஆயிரம் ரூபாய் மூலதனத்தை கொண்டு தொடங்கிய தொழில், இந்த நிலையை எட்டியுள்ளது என்றால், அவரை லேசு பட்டவராக கருதி விட முடியுமா என்ன?

mafoi pandiyarajan mafoi-company

உண்மையில் மக்களுக்கு தன்னால் இயன்ற பணிகளை ஆற்ற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போதாது. அதற்கான வாய்ப்பு, பதவி கிடைக்க வேண்டும். திறமை மட்டும் நீண்ட காலம் பதவியை தக்க வைத்துக் கொள்ள உதவாது. இன்றைய சூழலில் சில சமரசங்களை செய்து கொள்ளாமல், எந்த அரசியல்வாதியாலும் பதவியில் நீடிக்க முடியாது. படித்தவர்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று நினைத்து ஒதுங்கி நிற்காமல், பணம் சம்பாதிக்க தெரியும் என்றாலும், அரசியலில் இறங்கி தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர். பொதுவெளியில் ஒரு போதும் நாகரீகமற்ற வார்த்தை பேசியது இல்லை. அரசியல் ரீதியாக மாற்று சிந்தனை கொண்டவர்களின் மரியாதையையும் பெற்றவர்.