HotPicks

இரயில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் போது, ஓட்டுனர் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க!

Sep 10 2020 01:25:00 PM

ரயில் பயணம் மலிவானது என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த பயணத்தின் ஹீரோக்களான, லோகோ பைலட்கள் அனுபவிக்கும் துயரம் குறித்து யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் ஓட்டுபவர்களை "லோகோ பைலட்" என்றும், அவருக்கு உதவியாக உடன் செல்பவரை "துணை லோகோ பைலட்" என்றும் அழைப்பார்கள். சில நேரங்களில் தொடர்ச்சியாக 13 மணி நேரம் வேலை செய்ய வேண்டி வரும். அதிலும் தப்பித்தவறி சிவப்பு சிக்னலை மீறிவிட்டால், வேலை பறிபோகும் அபாயமும் உண்டு.

loco-poilet train loco-train

ஓடும் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து எத்தனையோ பேர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனரே, லோகோ பைலட் நினைத்தால் பிரேக் அடித்து விபத்தை தடுக்கலாமே என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலில், பிரேக் அப்ளை செய்தால், வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தாண்டி சென்று தான் நிற்குமாம். அதாவது நீங்கள் நிற்கும் இடத்தில் பிரேக் பிடித்தால், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் சென்று நிற்கும்.

loco-poilet train loco-train

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். இரயில் பாதையில் எது சிக்கினாலும், ஏன் தூள்தூளாகப் போகிறதென்று. சரி இரயில் இயக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். 12 மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்திலிருந்து இயக்கும் லோகோ பைலட்டுக்கு தூக்கம் வந்தால் என்ன ஆகும்? ஏற்கனவே நிறைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். ஓட்டுனர் இன்றி படுவேகத்தில் இரயில் பயணிப்பது போன்று கதை களம் நகரும். அதில் சந்திக்கும் சிக்கல்களை, சுவாரஸ்யம் கலந்து காட்சிபடுத்தியிருப்பார்கள்.

loco-poilet train loco-train

படமாக பார்க்க நல்லா இருக்குமே தவிர, நிஜத்தில் இப்படி நடக்கவாய்ப்பில்லை. ரயில் லோகோ பைலட் தூங்க முடியும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பைலட்டுகளும் தூங்க முடியாது. விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களுக்கு முன்னால் இருக்கும். அது தூங்க நினைத்தாலும் தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பட்டனை அமுக்க வேண்டுமாம்.

loco-poilet train loco-train

அப்படி பட்டனை அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு பிறகு விளக்கு எரியும். அதனையும் கண்டுகொள்ளாமல் விட்டால், அடுத்த எட்டு வினாடிக்கு பிறகு விளக்கு எரிவதுடன், சத்தமும் சேர்ந்து வரும். அதையும் கண்டுகொள்ளவில்லை என்றால், இரயில் தானாகவே நின்று விடும். அதனை ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் என்பார்கள். இவ்வளவு பாதுகாப்பு வசதி இருப்பதால் தான், இன்றைக்கு ரயில் பயணம் பாதுகாப்பானதாக மாறியிருக்கிறது. 

loco-poilet train loco-train

இரயிலின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருக்கும் போது மட்டும் அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை. நேரான பாதையில், எவ்வித இயக்கமும் இன்றி செல்லும் போது மட்டுமே, தூங்கிவிட அதிக வாய்ப்பு உள்ளதால், அந்த நேரங்களில் நிமிடத்திற்கு ஒருமுறை பட்டன் அமுக்க வேண்டி வரும். இப்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால் பட்டன் அமுக்கும் முறை, அந்தக்காலத்தில் கம்பியை இழுத்துவிட வேண்டுமாம். இது போல இன்னும் எத்தனையோ நமக்கு தெரியாத, சுவாரஸ்ய தகவல்கள் இரயில் பயணத்தில் இருக்கு. இனி அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம் வாங்க.