Misc

#fairness: ஒயிட்னிங் க்ரீம்களை பயன்படுத்தி செயற்கையாக முகத்தின் சிகப்பழகை கூட்டுவது பலனளிக்குமா? இல்லை பணம் பிடுங்கும் வேலையா?

Feb 14 2020

இன்னும் ஒருவாரத்துல காலேஜ்ல சேரவுள்ள எங்க அக்கா புள்ள செய்யற வேலையெல்லாம் பார்த்தா, காளியாத்தா கோவில்ல போய் மந்திரிக்கணும் போல!

வீடு முச்சூடும் புதுத்துணி, புது செருப்பு அது இல்லாம கண்ட கண்ட க்ரீமெல்லாம் கடக்குது.

என்ன அம்மணி..! இம்புட்டு க்ரீம் எதற்கு இத்தனைனு கேட்டா, எல்லாமே நாலு நாள்ல கலர் ஆகறதுக்கு தான்னு சொன்னாப்டி! 

இந்த புள்ள காட்டுக்குள்ள சுத்தி சுத்தி அடுப்புல வெந்த கரி கலர்ல இருக்கும்போது, இந்த கிரீம் எல்லாம் அவசியம்தான்னு மனசுல நினைச்சுகிட்டு கிரீம் பின்னாடி பார்த்தா, எல்லாமே உயிர்கொல்லி வேதிப்பொருள்.

எனக்கு எப்படி தெரியும்னு கேட்கறீங்களா? டாக்டர் சேதுராமன் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர் தான் இதைப்பற்றி விளக்கமா சொல்லிருக்காறே.

Skin Lightening

 

#fairness, இந்த வீடியோவ பார்த்ததும் நம்ம புள்ள எல்லா க்ரீமையும் வாங்குன இடத்துலேயே கொடுத்து காசை  திருப்பி வாங்கிடுச்சு. 

பொறவு  நான் சொன்னேன், 'அம்மணி..! நீ க்ரீம் போட்டு சிகப்பாகறது எல்லாம் சரிதான்.  ஆனால் படுச்ச புள்ளைக்கு அழகா அந்த க்ரீம்ல என்னவெல்லாம் இருக்குனு பின்னாடி கொஞ்சம் திருப்பி பார்த்துட்டு வாங்குனு'.  புள்ளைக்கு விளங்கியிருக்கும்னு நம்புறே.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top