Hugs & Kisses

#OMG: பெண்களை போலவே விலங்குகள், பறவைகளுக்கும் மாதவிடாய் சுழற்சி உண்டா?

Mar 23 2020

பெண்ணின் கருப்பையானது கருவை உருவாக்கும் திறன் பெற்று, கருமுட்டைகளை உற்பத்தி செய்து வைத்திருக்கும். அந்த முட்டைகள் கருப்பையின் சுவரில் ஒட்டிக் காணப்படும். இந்த கருமுட்டைகள், புதிய கருவை உருவாக்க விந்தின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும். விந்தின் வருகை இல்லாத பட்சத்தில் அது கருப்பை சுவரில் இருந்து தன்னை விலக்க முயற்சிக்கின்றன. இதனால் வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது வயதுக்கு வந்த பெண்களில் காணப்படும் இயற்கையான நிகழ்வு.

இதுவே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் நடக்குமா? என்ற சந்தேகம் வரலாம். விலங்குகளில் என்று கூறுவதை விட பாலூட்டிகளில் சிலவற்றில் உண்டு என்றே கூறலாம். விலங்குகளில் மாதவிடாய் பற்றி சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் Primates எனப்படும் முதல்நிலை விலங்குகளில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாதவிடாய் வெளியேறும் நிகழ்வானது முதன்மையாக மனிதர்களிடமும், பின்னர் சிம்பன்சிகள் போன்ற விலங்குகளிடமும் காணப்படுகிறது.

அடுத்து பறவைகளில் மாதவிடாய் சுழற்சி என்பது கிடையாது. சிலர் கோழிகளில் உண்டென கூறுவர். கோழி முட்டையானது மாதவிடாய் மூலமாக உருவாகிறது என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இவற்றிற்கென தனியாக இனப்பெருக்க காலம் உண்டு. அந்த நேரத்தில் தான் இவை இணையும். 

Top