Around me

Sevvey Diaries இப்படிச் செய்யுங்க உணவுப் பொருள் சீக்கிரம் கெட்டுப் போகாது!

Nov 21 2020 12:18:00 PM

சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால், ஒரு மாதம் வரை கெடாமலும் முளை விடாமலும் இருக்கும் 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

குளிர்ந்த நீரில் சில சொட்டு எலுமிச்சைச்சாற்றை விட்டு அதில் காய்கறிகளை போட்டு வைக்கலாம். இதனால், காய்கறிகள் அப்போது பறித்தது போல ஃபிரெஷ்ஷாக இருக்கும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

 

 

கொத்துமல்லித்தழை களை நன்கு ஆய்ந்து, சுத்தமான தண்ணீரில் அலசி, நிழலில் உலர்த்தவும். பின்னர் அதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

 

எலுமிச்சம்பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும் 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

தக்காளியும் எலுமிச்சம்பழமும் சீக்கிரம் கெட்டுப் போகாமலிருக்க, அவற்றை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் போதும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

 

மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால், கெட்டுப் போகாமல், நீண்ட நாள் பயன்படும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

நீண்ட நாட்களுக்கு முட்டை கெடாமல் இருக்க, முட்டை ஓட்டின் மீது, ரீஃபைண்ட் ஆயில் சிறிதளவு தேய்த்து வைத்தால் போதும் 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிளவு தேனை விட்டு வைக்கலாம் 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

ஆப்பிள், கேரட் இரண்டையும் ஃபிரிட்ஜில் ஒரே கம்பார்ட்மென்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வரும் ஒருவித வாயுவானது கேரட்டை கசக்கச் செய்து விடும்.

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி, அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

நெய் எவ்வளவு நாளானாலும் ஃபிரெஷ்ஷாக இருக்க, நெய் வைக்கும் பாத்திரத்தில், ஒரு வெல்லத் துண்டை போட்டு வைக்கவும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentips 

 

வெண்ணெயில் சிறிதளவு உப்பைத் தூவி விட்டால் நாள்பட்டாலும்கூட கெடாமல் இருக்கும். 

fresh-vegetable keepfresh fruittips kitchentipsfresh-vegetable keepfresh fruittips kitchentips 

சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள செய்திகளைப் படிக்க செவ்வேயை (Sevvey) தொடர்ந்து படியுங்கள்