HotPicks

#CleanseBot : மெத்தையில் இந்த சின்னராசா செய்யும் வித்தை - விஷயம் தெரிஞ்சா கூடவே தூக்கி போவோம்!

Feb 10 2020

சுத்தம் பண்ணாத பெட்ல படுத்த அப்பாவுக்கு, தோல் அலர்ஜி வந்துருச்சு. கையை சொரிந்த படியே வந்தவரை கூப்பிட்டு அருகில் அமர வைத்தேன். என்னப்பா ஆச்சு என்று சந்தேகத்துடன் கேட்க, "கழுத்தையும், கையையும்" காண்பித்தார். தோல் சிவந்து போய் பூச்சிக்கடி மாதிரி தடிப்பு, தடிப்பாக இருந்தது. மருந்து போட்டால், அப்போதைக்கு தான் சரியாகும். இதற்கு நிரந்தர தீர்வு இல்லையா யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் தான்,  இன்டர்நெட்டில் CleanseBot பற்றிய சில தகவல்களை காண நேர்ந்தது. "என்னடா கண்ணு இது..?  நீ வெச்சிருக்க மோடம் மாதிரி இருக்குன்னு" அப்பா கேட்க, கொஞ்சம் கொஞ்சமாக விளக்க ஆரம்பித்தேன்.

your image

#1. அப்பா CleanseBot-னா Vacuum Cleaner robots மாதிரி ஒரு ரோபோட் வகையை சேர்ந்தது. மெத்தை, தலையணையில் இருக்க நுண்ணுயிரிகளை அழிக்கும் சின்னராசாதான் இந்த CleanseBot.

#2. 18 வகையான செயற்கை நுண்ணறிவு திறன்கள் கொண்டு படைக்கப்பட்ட இந்த CleanseBot, மெத்தைகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், புற ஊதா கதிர்கள் மூலம் மெத்தைகளோடு சேர்ந்து சுற்றி இருக்கும் அறையின் காற்றையும் தூய்மையாக்கும்.

#3. இரயில், பஸ் பயணங்கள், வெளியூர் பயணத்தின்போது ஹோட்டல் அல்லது சிறுவீடுகளில் தங்கினால், இந்த சின்னராசாவை உடன் எடுத்துச் சென்றால் படுக்கும் முன்னர் அங்கிருக்கும் மெத்தை, தலையணைகளை சில நிமிடங்களில் சுத்தம் செய்து விட்டு நிம்மதியா தூங்கலாம். உங்களுக்கு தோல் தடிப்பு வரும் பிரச்சனையும் இருக்காது.

#CleanseBot நல்லா இருக்கே. அப்போ நமக்கும் ஒண்ணு ஆர்டர் பண்ணுடா கண்ணு. அம்மா சரியா பெட் சுத்தம் செய்யலனாலும், நாம இத வெச்சு சுத்தம் பண்ணிக்குவோம்.

 

 

Top