Around me

இப்ப தான் நீங்க சரியான முடிவெடுத்துள்ளீர்கள். கொண்டாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.

Jan 21 2021 08:25:00 AM

தல தோனி என்றாலே மாஸ். அதுவும் அவரது தலைமையில் இந்திய அணி செய்த சாதனைகள் ஏராளம். அவரை போல இன்னொரு கேப்டன் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, அனைவரையும் வியக்க வைக்கிறது அவரது சாதனைகள். அந்த வரிசையில் சென்னை மண்ணின் ஆலமரமாக, ஐபிஎல் போட்டிகளில் கொடிகட்டி பறக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் இன்று வரையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சென்னை அணிக்காக மேட்ச் பார்ப்பவர்களை விட தல தோனிக்காக மேட்ச் பார்ப்பவர்கள் தான் அதிகம். மற்ற அணி ரசிகர்கள் கூட தோனிக்காக சென்னை அணிக்கு ஆதரவு தரும் வகையில் இருப்பவர் தான் இவர்.

csk-ipl-2021

இப்படி பல சிறப்புகளை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி, ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு மிக பெரிய சரிவை சந்தித்தது. தொடக்க வீரர் பாப் டுப்ளசிஸ் தவிர மற்ற வீர்களின் ஆட்டம் சுமார் தான். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங் படு மோசமாக இருந்த நிலையில் வெற்றிக்கனவு வீணானது.

csk-ipl-2021

அந்த நிலையில் கேதார் ஜாதவ் மிக அதிகமாகவே விமர்சிக்கப்பட்டார். அவரை அணியிலிருந்து வெளியேற்றிவிட பலரும் கருத்து தெரிவித்த நிலையில், 2021 வீரர்கள் வெளியேற்றப்பட்டியலில் கேதார் ஜாதவ் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சென்னை அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்ப தான் நீங்க சரியான முடிவெடுத்துள்ளீர்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.