Spellbound

கருமோ! கருமோ! டைனிங் டேபிளில் ஷிவானியை மடியில் கிடத்திய பாலா! அதற்கு ஷிவானி சொன்ன அசிங் கமான ரீசன்?

Nov 20 2020 11:55:00 AM

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டன்ட் கிடைக்காவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான், "காதல் கண்ணை மறைக்குது, கத்தரிக்கா வெண்டைக்காயை மறைக்குதுன்னு" கண்ட கருமத்தை எல்லாம் சொல்லி, ஷிவானி-பாலாஜியை காதலர்கள் போல காட்டினர். காதல் இல்லை என பாலா ஒரு வார்த்தை சொன்னதும், ஷிவானி மூஞ்சி சுருங்கிப்போனது ஊருக்கே தெரியும். இந்த இலட்சணத்தில் திரும்ப நாங்க அண்ணன்-தங்கச்சி என்று சொன்னால், கோவம் சுருக்குன்னு ஏறுமா? ஏறாதா?

டைனிங் டேபிள் முன்னால் உட்கார்ந்துகொண்டு எல்லோரும் பேசிக்கிட்டு இருக்காங்க. பாலாவுக்கும், சனம் ஷெட்டிக்கும் இடையே காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கம் போல, குட்டி போட்ட பூனை மாதிரி பாலா பக்கத்திலேயே ஷிவானியும் உட்கார்ந்து இருக்காங்க. இன்னைக்கு வரைக்கும், எந்த இடத்திலும் ஷிவானி மீது காதல் இல்லை என பாலா உறுதியாக கூறியது கிடையாது. "வந்தால் சொல்கிறேன்னு" சொல்லி ஒரு ஆப்சனில் தான் வைத்திருக்கிறார்.

shivani balaji bigg-boss

அப்படி இருக்கும் பட்சத்தில், சனம் ஷெட்டியுடன் பேசிக்கொண்டே, ஷிவானி மேல் கை போட்ட பாலா, சட்டென அவரை மடியில் சாய்த்துக் கொண்டது ரொம்பவுமே ஷாக்கிங்கா இருக்கு. அதற்கு ஷிவானியும் எதுவும் சொல்லாமல், கம்முன்னு கைகளுக்கு இடையில் தலையை வைத்துக்கொண்டு படுத்தது என்ன மாதிரியான உள்நோக்கத்துடன் என்று புரியவில்லை. என்னடா நடக்குது இங்கன்னு? சனம் கேட்ட பிறகு, ஷிவானி பாலா மடியில் இருந்து எழுந்து சொன்ன பதில் கடுப்பை கிளப்புது.

shivani balaji bigg-boss

அண்ணன்-தங்கச்சி என்றால் அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் கண்டுக்க கூடாதுன்னு அசால்டா சொல்லிவிட்டு சிரிக்கிறார் ஷிவானி. இவங்களுக்கு அண்ணன் தங்கை உறவு விளையாட்டா போச்சு போலிருக்கு. இந்த அளவுக்கு புனிதமான உறவை யாரும் கொச்சைபடுத்த முடியாது. பிக்பாஸ் இதனை கண்டிக்கப்போகிறாரா? இல்லை இது போன்ற கலாச்சார சீர்கேடுகளை மேலும் ஆதரிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். எதற்கும் இவங்க மேல ஒரு கண்ணு வைப்போம்.