His & Her

#Must Try: ஊரடங்கு நேரத்தில் ஊரே வியக்கும் பேரழகியாக வேண்டுமா? இதே டாப் 5 யூடியூப் சேனல்!

Apr 11 2020 11:44:00 AM

மூன்று நாட்கள் பியூட்டி பார்லர் மூடினால், நயன்தாரா மாதிரி இருக்கும் பெண் கூட, நகைச்சுவை நடிகர் வடிவேல் மாதிரி மாறுவதாக மீம்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல கோட்டிங் மேக் அப் போட்டு பேரழகியாக கட்டிக்கொள்ளும் வெளியூர் பெண்களை விட, வெறும் மஞ்சள் போட்டு குளித்து, நெற்றியில் திருநீறு வைத்து தேவதையாக காட்சியளிக்கும் நம்ம ஊரு பெண்களோடு போட்டி போட முடியுமா என்ன? நம்ம ஊரு பெண்களும் மனது வைத்தால், அவர்கள் அளவுக்கு மேக்-அப் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். அதனை எளிதாக விளக்கும் டாப் 5 யூடியூப் சேனல்கள் குறித்த விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

#1. Jackie Aina - இவருக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இவர் ஒரு நைஜீரிய-அமெரிக்கன் யூடியூபர்.

#2. Alissa Ashley - யூடியூபில் 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டவர் இவர்.

#3. Desi Perkins - இவருக்கு யூடியூப் சேனலில் 3 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். 

#4. Nyma Tang - தென் சூடான் கருப்பு அழகிக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

#5. Mixed Makeup - இந்த சேனல் தோல் பராமரிப்புக்கு கவனம் செலுத்துகிறது. இந்த சேனலில் 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

#Must Try: இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பல திறமையான யூடியூப் சேனல்கள் உண்டு. அவற்றின் அடுத்த தொகுப்பை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.