Out of Box

'டோலி'யின் 380 கோடியை ஒரே பேச்சில் காலி செய்த 'சாமி'.!

Feb 12 2020

your image

என்றா கண்ணு வெசனமா இருக்க.? பொழுதோட நேரத்துல கன்னத்துல கை வெச்சு உக்காராதயாக்கும்..

அட எனுங்கப்பா..! நானே 380 கோடி போயிருமேன்னு பல்ல கடிச்சுட்டு இருக்க, உங்களுக்கு கன்னத்துல கை வைக்கறது தான் குறைச்சலாக்கும்..?

யாருடா கண்டது.? உனக்கு ஆயிரம் சோலி இருக்கும். உன் தோஸ்துக ஆயிரம் பேரோட தாலி அறுக்கும். எனக்கு என்னப்பா தெரியும்.

தெரியுதுல.. அப்போ இறுவ கட்டிக்கிட்டு இருங்க. எனக்கு மகா கோவம் வந்துரும்.

உளராதப்பா.! வீட்டு திண்ணைல மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு உட்கார்ந்ததுக்கு, நான் தான் உன் மேல கோவப்படனும்.

இந்தா அப்புச்சி.. என்ன ஆச்சுன்னு கூட கேட்க மாட்டியா.? லோலாயம் பண்றதே தான் உன் வேலையா.?

என்னான்னு சொன்னாத்தானே ஆகும். சும்மா விதண்டவாதம் பேசிக்கிட்டே இருந்தா எப்படி..?

380 கோடி போட்டு 2021 எலெக்சனுக்காக ஒரு கோஷ்டிய இறக்குன அப்புச்சி. இந்த சாமி ஒரே பேச்சுல எல்லாத்தையும் காலி பண்ணி போட்டாரு.

இப்போ என்றா கண்ணு பண்றது.? சாமி என்ன பேசுனாரு.?

"டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்"னு ஒரே அறிவிப்பு தான். மொத்த மீடியாவும் குளோஸ். எல்லாம் அவரு பக்கம் போறாங்க அப்புச்சி.

விடற கண்ணு. நமக்கு இன்னும் பணம் இருக்கு, நேரம் இருக்கு, நாமளும் விளையாடுவோம். நீ போய் பேப்பர் படிக்க பிராக்டீஸ் பண்ணு போ.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top